அத்தாட்சி

Latest Post



மே 01 சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனைய சர்வதேச தினங்களை விட தொழிலாளர் தினம்தான் அரசியல் கட்சிகளால் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றது. தொழிலாளர் உரிமையைப் பேசுவதை விட கட்சியின் பலத்தைத் தூக்கிக் காட்டுவதற்கும் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஊட்டுவதற்குமுரிய தினமாகவே இத்தினம் அரசியல் கட்சிகளால் பெரிதும் கொண்டாடப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் முதலாளித்துவ வர்க்கங்களால் தொழிலாளர்கள் நசுக்கப்பட்டனர். அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டன. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை. சக்திக்கு மீறிய பணிகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. இவ்வாறு ஆதிக்க சக்திகளாலும் முதலாளித்துவ வர்க்கத்தினராலும் தொழிலாளர் சமூகம் வஞ்சிக்கப்பட்டு வந்தது.

தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னர் இன்று சர்வதேச அளவில் தொழிலாளர் உரிமைகளைப் பேணக் கூடிய சட்டதிட்டங்கள் உள்ளன. அவர்களுக்கான ஊதியம், வேலை நேரம், ஓய்வு, சலுகைகள் என்பன நிர்ணயிக்கப்பட்டு அதற்கு எதிரான நடவடிக்கைகளை சட்ட ரீதியில் அணுகுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

சர்வதேச சட்டங்கள் தொழிலாளர் உரிமைகளைப் பற்றிப் பேசும் முன்னரே இஸ்லாம் தொழிலாளர் நலன் பற்றிப் பேசியது. நபி(ச) அவர்கள் காலத்தில் அடிமைகள் இருந்தனர். அவர்கள் மனிதப் பிறவிகளாகவே மதிக்கப்பட்டது கிடையாது. நபி(ச) அவர்கள் இத்தகைய அடிமைகளை வேலை செய்யப் பணிப்பதாக இருந்தாலும் அவர்களின் சக்திக்கு மீறிய வேலைகளைக் கொடுக்கக் கூடாது, பாரமான பொருட்களை சுமக்குமாறு பணித்தால் எஜமானனும் கூட நின்று ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் அடித்துத் துண்புறுத்தப்படக் கூடாது. அவர்களுக்குரிய உணவு வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் போதித்தார்கள்.

இதே வேளை, இஸ்லாம் உழைப்பை ஊக்குவிக்கின்றது. உழைக்கும் வர்க்கம்தான் நாட்டின் முதுகெலும்பாக நிற்கின்றது. இஸ்லாமிய தூதைச் சுமந்து வந்த இறைத்தூதர்களும் உழைப்பாளிகளாக இருந்துள்ளனர். ஸகரிய்யா நபி தச்சராகவும், தாவூத் நபி கவசம் செய்பவராகவும், அனைத்து நபிமார்களும் ஆடு மேய்த்தவர்களாகவும் இருந்துள்ளனர். நபி(ச) அவர்கள் ஆடு மேய்த்துள்ளார்கள், வர்த்தகம் செய்துள்ளார்கள்.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும் உழைப்பாளியை இஸ்லாம் உயர்வாகப் பார்க்கின்றது. உழைப்பாளிகளின் பயண வசதிகளைக் கவனத்திற் கொண்டு நீண்ட நேரம் தொழுவதையும் இஸ்லாம் தவிர்க்கச் சொல்கின்றது. தொழுது முடிந்தால் பூமியில் பரந்து சென்று உழையுங்கள் என்கின்றது. இஸ்லாம் இவ்வாறு உழைப்பின் உயர்வு பற்றியும் பேசுகின்றது. உழைப்பாளியின் உரிமை பற்றியும் பேசுகின்றது.

இன்றைய காலகட்டத்தில் உழைப்பாளிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் குறைந்துவிட்டன எனலாம். அப்படியே அடக்குமுறைகள் நடந்தால் தொழிலாளர் சங்கங்கள் தொழில்சங்க நடவடிக்கைகளில் இறங்கிவிடுகின்றனர். தொழிலாளர்களுக்கு நியாயம் வேண்டி குரல் எழுப்ப தொழிலாளர் உரிமை பேணும் அமைப்புக்கள் உள்ளன. எனவே, தனிப்பட்ட சில தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. ஆனால், கூட்டாக தொழிலாளர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் குறைந்துள்ளன எனலாம்.

இஸ்லாம் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிப் பேசும் அதே நேரம் அவர்களது கடமைகள் பற்றியும் பேசுகின்றது. தொழிலாளர்கள் குறித்த வேலையைச் செய்யும் சக்தியுடையவர்களாகவும், நம்பிக்கையுடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இன்று தொழிலாளர்கள் தமது பணி விடயத்தில் நம்பிக்கை, நாணயமற்றவர்களாக மாறியுள்ளனர்.

‘உழைப்பாளியின் வியர்வை காய்வதற்குள் அவனுக்குரிய ஊதியத்தைக் கொடுத்துவிடுங்கள்’ என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். உழைப்பாளிக்கு உரிய முறையில் வஞ்சகம் செய்யாமல் ஊதியத்தை வழங்க வேண்டும் என இந்த செய்தி உழைப்பாளியின் உரிமையைப் பேசும் அதே வேளை, தொழிலாளி தன் எஜமானுக்கு துரோகம் செய்யக் கூடாது என்றும் கூறுகின்றது. தொழிலாளியின் வியர்வை காய்வதற்குள்… என்ற வாசகத்தின் மூலம் ஒரு தொழிலாளி வியர்வை சிந்தும் அளவுக்கு அதாவது, எஜமானுக்கு விசுவாசமாக சிரமத்தை ஏற்று பணி செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

இன்று தொழிலாளர் உரிமை பேசப்படும் அளவுக்கு அவர்களின் கடமை பேசப்படுவதுமில்லை, பேணப்படுவதுமில்லை. தொழிலாளர்கள் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றினால் நாடு எப்போதோ முன்னேறியிருக்கும். குறிப்பாக, அரச ஊழியர்களின் பணி சரியாகவும், நிறைவாகவும் நிறைவேற்றப்பட்டால் நாடு நலம்பெறும்.

அரச ஊழியர்கள் தொழிலாளர்களுக்குரிய அனைத்து சௌபாக்கியங்களையும் அனுபவிக்கின்றனர். சம்பளம், ஓய்வூதியம், வரையறுக்கப்பட்ட வேலை நேரம், விடுமுறை, கடன்கள்…. இப்படி பலதையும் அனுபவித்துக் கொண்டு பணி செய்வதில் அசட்டையாக உள்ளனர்.

நிறைவான சம்பளத்தைப் பெறும் இவர்கள் சாதாரண ஒரு ஆவணத்தை சரி செய்ய இலஞ்சத்தை எதிர்பார்க்கின்றனர். மேசை நிறைய பைல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க அரட்டையடிப்பதிலும், வீணாக பொழுது போக்குவதிலும் காலத்தைக் கழிக்கின்றனர். சின்னதொரு பணியாக இருந்தாலும் நாடி வருபவர்களை அலையவிட்டு நாய்படாதபாடு படவைக்கின்றனர்.

தொழிலாளர் உரிமை பற்றிப் பேசும் இவர்கள் பயணாளிகள், மக்கள் உரிமையை மதிப்பதில்லை. எல்லாம் முடிந்த ஒரு பைலில் சாதாரண ஒரு கையொப்பமிடுவதற்குக் கூட மாதக் கணக்கில் அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது. இவர்களின் இத்தகைய அசமந்தப் போக்கினால் மக்களுக்கு அரசின் மீது வெறுப்பு ஏற்படுகின்றது. அது மாத்திரமின்றி பல எதிர்பாராத தேவையற்ற பிரச்சினைகள், இழப்புக்களைக் கூட சந்திக்க நேரிடுகின்றது.

அரச தொழிலாளர்கள் தொழிலை முறையாகச் செய்யாமல் இலஞ்சப் பேர்வழிகளாக மாறியுள்ளமை நாட்டை அழிவின் விளிம்புக்கே அழைத்துச் செல்கின்றது.

காவல்துறையினருக்கும் போதைப்பொருள் வியாபாரிகள், பாதாள உலகக் கோஷ்டியினருக்கும் இடையில் உள்ள உறவால் நாடு நலிவடைகின்றது. போக்குவரத்துத் துறை பொலிஸ் அதிகாரிகளின் பணம் பிடுங்கும் பிச்சைக்காரப் போக்கினால் நாட்டில் விபத்துக்களும், அழிவுகளும் அதிகரித்துள்ளன. அதிகாரிகளின் இலஞ்ச மோகத்தால் பணத்தைக் கொடுத்தால் எந்தக் காரியத்தையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

தொழில்களில் உயர்ந்த, கண்ணியமான தொழில்தான் ஆசிரியர் தொழில். வருங்கால சந்ததிகளை வடிவமைக்கும் இந்தப் பணி கூட பணம் பறிக்கும் பகல்கொள்ளையாக மாறிவிட்டது என்றால் மிகையாகாது. ஆசிரியர்கள், அதிபர்கள் தமது கடமைகளை நிறைவாக நிறைவேற்றினால் நாடு கல்வித் துறையில் பெரிய முன்னேற்றத்தை அடையும். ஆனால், அரசாங்க சம்பளத்தைப் பெறும் ஆசிரியர்களில் பலரும் பாடசாலை கற்பித்தலில் காட்டும் ஆர்வத்தை விட பிரத்தியேக வகுப்புக்களில்தான் அதிக அக்கறையைக் காட்டுகின்றனர். இதனால் பாடசாலை இலவசக் கல்வியில் மக்களுக்கு நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. பாடசாலைக்கு மட்டும் அனுப்பினால் போதாது, மாலை நேர பிரத்தியேக வகுப்புக்கு அதுவும் குறித்த பாடசாலையில் குறித்த பாடத்தை கற்பிக்கும் ஆசிரியரின் வகுப்புக்கு அனுப்பினால்தான் பிள்ளையை முன்னேற்றலாம் என்ற மனநிலை வளர்ந்துள்ளது.

இதனால் அரசின் இலவசக் கல்வித் திட்டத்தில் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். மாணவ சமூகம் பாடசாலை, மாலை நேர பிரத்தியேக வகுப்புக்கள் என தமது இளமையையும், ஓய்வையும், நிம்மதியையும்… இன்னும் பல அம்சங்களையும் தொலைத்துக் கொண்டிருப்பதுடன் கற்றலில் சலிப்படைந்தும் போய்விடுகின்றனர்.

எனவே, நாடு நலம்பெற வேண்டும் என்றால், முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடவேண்டும் என்றால் உழைப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்! அதே போன்று உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பேணப்பட வேண்டும்! உழைப்பாளிகளும் தமது ஊதியத்திற்குத் தகுந்த பணியை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும். வெறுமனே உழைப்பாளிகளின் உரிமையை மட்டும் பேசி நாட்டை முன்னேற்ற முடியாது.

எனவே, தொழிலாளர்கள் தமது கடமையை நிறைவாகச் செய்து தமது உழைப்பின், ஊதியத்தை ஆகுமானதாக மாற்றிக் கொள்வதுடன் நாட்டையும் முன்னேற்ற முயல வேண்டும். கடமைகளைக் செய்வோம்! உரிமைகளைப் பெறுவோம்! என்ற மனநிலை வளர வேண்டும். இதுவே நாட்டுக்கும், வீட்டுக்கும் நலமாக அமையும்.



ந்தியாவில் ஒரிஸாவில் பிறந்த சந்திரஜித் பதே, 

2002 ம் ஆண்டு தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (National Institute of Technology ) கணணி விஞ்ஞான தொழில் நுட்ப துறையில் பட்டம் பெற்று,


இன்று அமெரிக்காவில் தகவல் கட்டுமான துறையில் ஆலோசகராக பணிபுரிகிறார். ( IT Consultant ) .

அமெரிக்காவில் சகோதரர் ஹிதாயத் என்பவர் மூலமாக இஸ்லாத்திற்கு வழிகாட்டப்பட்டு, முஸ்லிமாக இணைந்து கொண்டார்.


அன்றிலிருந்து இஸ்லாமிய ஏகத்துவ பணியில் தன்னை
முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர், அமெரிக்காவில்
உலகப்புகழ்பெற்ற கல்வி நிறுவங்களிலுள்ள முஸ்லிம்
மாணவர்களின் அழைப்பையேற்று அங்கு தஃவா பணியாற்றி வருகின்றார்.

எட்டு வருடங்களின் பின்னர் தனது தாயை மீண்டும் இந்தியாவில் சந்திக்கும்பொழுது, ஆரத்தழுவும் மகிழ்ச்சிகரமான தருணத்தையே இப்படத்தில் காண்கின்றோம்.

இச்சந்தர்ப்பத்தில் மற்றுமோர் விடயத்தையும் Meezan தராசு இங்கு நினைவு கூர்கிறது. இவரது முகநூல் தளத்தில் ஆங்கிலத்திலிருந்து பல பதிவுகளை மொழிபெயர்த்து தமிழில் Meezan ல் பதிந்துள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


இவரது தஃவா பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்
அருள்பாளிப்பானாக.
(அல் குர் ஆன் 47:38)

"அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்."


மரணத்தை நெருங்கியவர் இறுதியாகச் செய்ய வேண்டியது !

⚂ அன்பிற்கினிய கொள்கைச் சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும்! {வரஹ்} இப்பதிவு உங்கள் அனைவரையும் சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும், பூரண உடல் நலத்தோடும் சந்திக்கட்டுமாக !


மரணத்தை நெருங்கியவர் கடைசியாக "லாயிலாஹ இல்லலல்லாஹ்" என்ற கலிமாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசிச் சொல்லாக இந்தக் கொள்கைப் பிரகடனம் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தை நெருங்கிய போது தமது கைகளைத் தண்ணீருக்குள் விட்டு முகத்தில் தடவிக் கொண்டு "லாயிலாஹ இல்லல்லாஹ்" மரணத்தினால் கடும் துன்பம் ஏற்படுகிறது எனக் கூறினார்கள்.

பின்னர் தமது கைகளை ஊன்றி "ஃபிர் ரஃபீகில் அஃலா" மிகச் சிறந்த நண்பனை நோக்கி... என்று கூறிக் கொண்டிருக்கும் போது உயிர் கைப்பற்றப்பட்டது. அவர்களின் கை சாய்ந்தது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 4449, 6510.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது "ஃபிர் ரஃபீகில் அஃலா" என்று கூறலானார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 4436.

நபிகள் நாயகம் ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் "அல்லாஹும்ம ஃபிர்லீ வர்ஹம்னீ வஅல்ஹிக்னீ பிர்ரஃபீக்" என்று கூறியதை நான் காது கொடுத்துக் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 4440.

இறைவா என்னை மன்னித்து அருள் புரிவாயாக! நண்பனுடன் என்னைச் சேர்ப்பாயாக! என்பது மேற்கண்ட துஆவின் பொருள்.


கலாநிதி யூ. எல். ஏ. அஷ்ரப் Ph.D (Al-Azhar)
தலைவர் – தாருல் ஹதீஸ்
பேராசிரியர் நஜ்ரான் பல்கலைக்கழகம்
சவூதி அரேபியா


அட்டவணை – உள்ளடக்கம்
1. ஸுன்னா என்றால் என்ன?
2. புகஹாக்கள் (மார்க்கச் சட்ட வல்லுணர்களின்) வரைவிலக்கணம்.
3. பித்அத் ஹஸனாவுக்குரிய சந்தேகங்களும் பதில்களும்
4. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வழிப்படுவதன் சட்டம் என்ன?
5. மத்ஹப்கள் என்றால் என்ன?
6. நான்கு மத்ஹபுகளில் ஒன்றை முழுமையாக கட்டாயம் தழுவ வேண்டுமா?
7. மத்ஹப் ஹதீஸுடன் முரண்படும் போது எவ்வாறு நடந்து கொள்வது?
8. ஊர்ஜிதமான ஹதீஸின் வகைகளும் நிபந்தனைகளும்.
9. ளஈஃபான (ஊர்ஜிதமற்ற) ஹதீஸ் என்றால் என்ன?
10. ளஈஃபான (ஊர்ஜிதமற்ற) ஹதீஸை இஸ்லாமிய சட்டத்துக்கு ஆதாரமாகக் கொள்ளலாமா?
11. ளஈஃபான (ஊர்ஜிதமற்ற) ஹதீஸை அமல்களின் சிறப்புக்களில் எடுத்துக் கொள்ளலாமா?

ஸுன்னா என்றால் என்ன?
ஸுன்னா என்ற அறபுப் பதத்திற்கு பாதை, வழிமுறை என்பது கருத்தாகும். ஹதீஸ்கலை வல்லுனர்கள் (ஸுன்னா) என்பதற்கு
பின்வருமாறு வரைவிலக்கணம் கூறுகின்றனர்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், உடல் அமைப்பு முறை, குண நெறி ஆகியவைகளாகும். இவை நபியவர்களுக்கு தூது கிடைப்பதற்கு முன்பு நிகழ்ந்தாலும் அல்லது பின்பு நிகழ்ந்தாலும் ஸுன்னா என்றே சொல்லப்படும். இதே கருத்தைத்தான் ஹதீஸ் என்ற பதமும் கொண்டிருக்கின்றது. இந்த அடிப்படையில் “அல்கிதாப், வஸ்ஸுன்னா”, அர்குர்ஆன், வல் ஹதீஸ் என்று பிரயோகிப்பது இஸ்லாமிய அறிஞர்களின் வழக்கமாகும்.

எனவே ஹதீஸ் கலை வல்லுணர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிய சகல விபரங்களையும் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். சொற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் இவைகளில் எதை ஆதாரமாகக் கொள்வது எதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்பதை வேறுபடுத்தும் வரைவிலக்கணங்களைத் தரும் முயற்சியில் இவர்கள் இறங்கவில்லை. இந்தப் பணியில் உஸூலிய்யூன்கள் (இஸ்லாமிய சட்ட மூல தத்துவ அறிஞர்கள்) ஈடுபட்டார்கள். எனவே அவர்கள் ஸுன்னா என்பதற்குப் பின்வரும் வரை
விலக்கணத்தை முன்வைக்கிறார்கள் : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவம் கிடைத்த பின்பு கூறிய, செய்த, அங்கீகாரம் வழங்கிய விடயங்களாகும். எனவே நபித்துவத்திற்கு முந்திய, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைகள் ஆதாரமாக அமையாது. இவ்விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு கிடையாது. இதன் அடிப்படையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவத்திற்கு முன்பு ஹிறா குகையில் தியானத்தில் இருந்தார்கள் என்பதை முன்வைத்து சில ஸூபித்துவ வாதிகள் காடுகளிலும், குகைகளிலும், மலைகளிலும் தியானத்தில் இருப்பது ஆகும் எனக் கூறுவது அறியாமையாகும். மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவம் கிடைத்த பின்பு பல வருடங்கள் மக்காவில் தங்கியிருந்தார்கள்.

மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற பின் பலதடவை மக்காவை தரிசித்திருக்கிறார்கள் இந்தச் சந்தர்ப்பங்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களோ அல்லது அவர்களின் ஸஹாபாத் தோழர்களோ ஹிறா குகையை தரிசிக்கவுமில்லை, அங்கே எவ்வித வணக்கத்திலும் ஈடுபடவுமில்லை.


-Thanks-Islamkalvi.com-


‘இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத் தெளிவாகிவிட்டது. எவர் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) ‘தாகூத்’தை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டவராவார். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனுமாவான். ‘ (2:256)

‘லா இக்ராஹ பித்தீன்’ மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என இந்த வசனம் கூறுகின்றது. இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என யாரும் நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என்பதே இதன் அர்த்தமாகும். இஸ்லாத்தை ஏற்றவர் தொழுமாறு கட்டாயப்படுத்தப்படுவார். ஸகாத் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவார். இஸ்லாமிய கடமைகளைப் பேணுமாறும், அதன் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுமாறும் வலியுறுத்தப்படுவார். ஆனால், முஸ்லிம் அல்லாத ஒருவரை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மார்க்கத்தில் அனுமதி இல்லை. பிறரை இஸ்லாத்தை ஏற்குமாறு கட்டாயப் படுத்துவதை இஸ்லாம் தடுத்துள்ளது.

‘உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.’ (109:6)

உங்களுக்கு உங்கள் மார்க்கம், எமக்கு எமது மார்க்கம் என்பது இஸ்லாத்தின் சுலோகமாகும்.

‘லனா அஃமாலுனா வலகும் அஃமாலுகும்:’
‘எங்கள் செயற்பாடுகள் எமக்கு, உங்கள் செயற்பாடுகள் உங்களுக்கு!’ (28:55, 42:15) என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையாகும். யாரும் தமது சட்டத்தை அடுத்தவர் மீது திணிக்கக் கூடாது என இந்த வசனம் கூறுகின்றது.

‘சத்தியம் உங்களது இரட்சகனிடமிருந்து உள்ளதே! எனவே, விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும். விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக! அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத் தயார் செய்து வைத்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) உதவி தேடினால் முகங்களைப் பொசுக்கி விடும் உருக்கப்பட்ட செம்பைப் போன்ற சூடான நீர் அவர்களுக்கு வழங்கப்படும். பானத்தில் அது மிகக் கெட்டது. மேலும், அது மிகக்கெட்ட வசிப்பிடமாகும்.’ (18:29)

விரும்பியவர் ஏற்கலாம், விரும்பியவர் மறுக்கலாம். ஆனால், சத்தியத்தை மறுத்தவர்கள் மறுமைப் பேற்றைப் பெற முடியாது என்பதே இஸ்லாத்தின் போதனையாகும். இந்த அடிப்படையிலும் இஸ்லாத்தைப் போதிக்கலாம். யாரையும் நிர்ப்பந்திக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும்.

இஸ்லாத்தை ஏற்குமாறு யாரையும் நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை என்பதற்கு இஸ்லாம் அழகான காரணத்தையும் கூறுகின்றது.

வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது. சாதாரண அறிவுள்ளவனும் சிந்தித்தால் இஸ்லாம் சொல்லும் கருத்துத்தான் உண்மை என்பதை உணர்ந்து கொள்வான். இஸ்லாம் சத்தியமானது என்பதால் அதை ஏற்குமாறு நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை. சிந்தனை உள்ளவன் உண்மையைத் தானாகவே ஏற்றுக் கொள்வான்.

சிலை வணக்கம் அறிவீனமானது. பலதெய்வ நம்பிக்கை மூடத்தனமானது. ஜாதி வேறுபாடு என்பது பகுத்தறிவுக்கும், மனித நேயத்திற்கும் முரணானது என்பதையெல்லாம் தெளிவாக உணர்ந்த பின்னும் அவற்றைத் தேர்ந்தெடுப்பவனை நிர்ப்பந்தப்படுத்தி அவற்றை விட வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இஸ்லாத்தில் உளத்தூய்மை என்பது முக்கியமான தாகும். நிர்ப்பந்தத்திற்காக ஒருவன் இஸ்லாத்தை ஏற்பதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. எனவே, இஸ்லாம் நிர்ப்பந்த மதமாற்றத்தை அனுமதிக்கவில்லை.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பாதுகாக்க வாள் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதைப் பரப்புவதற்கு வாள் பயன் படுத்தப்பட்டதில்லை. அப்படிப் பயன்படுத்தவும் கூடாது! இன்று உலகில் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. வாள்தான் அதற்குக் காரணமா? முஸ்லிம்கள் பல நூற்றாண்டு களாக ஆட்சி செய்து வந்தனர். வாள் பயன் படுத்தப்பட்டிருந்தால் அங்கு வேறு மதங்கள் வளர்ந்திருக்க முடியுமா? போர்களே நடக்காத இந்தோனேசியா பகுதிகளில்தான் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். இஸ்லாத்தின் வளர்ச்சி மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களின் கட்டுக் கதையே இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கூற்றாகும். இஸ்லாம் இந்த சிந்தனைக்கே எதிரானது என்பதை இந்த வசனத்தின் மூலம் உறுதியாக அறியலாம்.


-Islamkalvi-



🔰 " லண்டன், மே 28 தினமும் இரண்டு முறை பல் துலக்குபவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்புக் குறைவு என லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.

🔰 "லண்டனில் இருந்து வெளி வரும் மருத்துவ இதழ் ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டது .


🔰 " இந்த ஆய்வை பேராசிரியர் ரிச்சர்டு வாட் என்பவர் தலைமையேற்று நடத்தினார் ..

🔰 " 11 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. .

❤ இந்த ஆய்வில் வாய் சுத்தத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வாட் கூறினார். .

🔰 " தினமும் இரு முறை பல் துலக்குபவர் களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு 70 சதவீதம் குறைவு எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. .

🔰 " வாயில் புண் ஏற்பட்டால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அதனால் இதயம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல இதய நோய் பராமரிப்பு செவிலியர் ஜூடி ஓ சுலிவான் தெரிவித்தார். .

🔰 " தினமும் காலையிலும் இரவிலும் பல் துலக்குவதால் வாய்ப்புண்ணால் ஏற்படும் பாக்டீரியா தொற்று தடுக்கப்பட்டு இதயம் காக்கப்படும் எனவும் அவர் கூறினார். .

🔰 " இதுபற்றி வாட் கூறுகையில் தங்களது ஆய்வு முடிவுகளை இதய நோய் வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் இது பற்றி மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். .

🔰 " தினமும் இருமுறை பல்துலைக்கினால் இதய நோய்வராது என்று இன்றைய அறிவியல் உலகம் கூறும் நிலையில்,

📆 காட்டுமிரண்டிகள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், 1400 ஆண்டுகளுக்கு முன்பே ,.

🔰 " இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்திகளை பாருங்கள்..

🔰 887. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :- ✔

🔰”என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்.” . .

🔰 "என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். .

🔰 888. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் திரும்பத் திரும்ப பல முறை வலியுறுத்தியுள்ளேன். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

🔰 889. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் இரவில் உறங்கி எழுந்ததும் பல் துலக்குவார்கள்.

🔰 "ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 11. ஜும்ஆத் தொழுகை .

🔰 " நபிகளார் மனித குலத்திற்கு பயன்படும் விதமாக கூறிச்சென்ற செய்திகளை உண்மைப்படுத்தும் விதமாக மேற்கண்ட லண்டன் ஆய்வு தெரிவிக்கின்றது . .

இன்றைய பதிவில் போட்டோ எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் கொண்ட நண்பர்களை மகிழ்விக்க கூடியவாறான விடயமொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.

இன்று சமூக வலைத்தளங்களை உபயோகிக்கும் பெரும்பாலானோர் இந்த போட்டோ எடிட்டிங் விடயத்தில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.




ஆகவே இன்றைய பதிவில் போட்டோ எடிட்டிங் செய்ய மிகச்சிறந்த ஒரு போட்டோ எடிட்டிங் பேக்-ஐ அறிமுகம் செய்கிறேன். எம்மில் பெரும்பாலனோருக்கு கூகுள் நிக் எனப்படும் போட்டோ எடிட்டிங் மென்பொருட்கள் பற்றி தெரிந்ததில்லை.

கூகுள் நிக் என்பது கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான மிகச்சிறந்ததொரு போட்டோ எடிட்டிங் மென்பொருள் பேக் ஆகும். அதிலே வித்தியாசமான எபெக்ட்-கள் கொண்ட 7 விதமான மென்பொருட்கள் காணப்படுகின்றன.


நேற்றைய தினம் வரை இந்த அதி சிறந்த போட்டோ எடிட்டிங் மென்பொருளுக்கு கூகுள் நிறுவனம் நிர்ணயித்த விலை 149 அமெரிக்க டாலர்களாகும். ஆனால் தற்போது கூகுள் நிறுவனம், இந்த போட்டோ எடிட்டிங் மென்பொருள் பேக்கை அனைத்து பாவனையாளர்களுக்கும் இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளது.

ஆகவே இந்த அருமையான கூகுளின் சிறப்பு போட்டோ எடிட்டிங் மென்பொருள் பேக்-ஐ நீங்களும் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

கூகுள் நிக் கேளக்சன்

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே இந்த போட்டோ எடிட்டிங் மென்பொருள் பேக்-ஐ பணம் செலுத்தி வாங்கிய பயனர்களின் பணத்தை முழுமையாக திருப்பி உரியவர்களிடமே வழங்கவும் முடிவெடுத்துள்ளது.





ஜப்பானில் ஆர்ச்சிலிஸ் நிறுவனம் கண்டறிந்துள்ள இந்த நாற்காலி வெகுநேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு கண்டிப்பாக கை கொடுக்கும். கணிணியின் முன் அமர்ந்து வேலை செய்பவர்களைத் தவிர மற்ற அனைவருக்குமே இந்த நாற்காலி உகந்த ஒரு கண்டுபிடிப்பாக இருக்கும். இந்த நாற்காலி ஒரு அணிந்து கொள்ளக்கூடிய உடை போன்று உள்ளது. இதனை அணிந்து கொண்டால் வெகுநேரம் நிற்பவர்களுக்கு ஒரு சப்போர்ட் தேவைப்படும்போது நாற்காலியாக மாற்றி அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்ச்சிலிஸ் நிறுவனம் இந்த அணியும் சாதனத்தினை வெகு நேரம் நின்று கொண்டே அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் சோர்வடையாமல் அவர்களது வேலையைச் செய்யவதற்காக தயாரித்துள்ளது. 


இதனால் ஒருவர் நின்று கொண்டே செய்ய வேண்டிய வேலைகளை சோர்வில்லாமல் செய்து முடிக்கலாம். மேலும் நின்று கொண்டே பணிபுரியும் மற்ற தொழிலாளர்களான பல் பொருள் அங்காடி ஊழியர்கள் , தயாரிப்பு துறையில் நின்று கொண்டே பணி புரிபவர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், பொறியாளர்கள் , நூலக உதவியாளர்கள், சிகையலங்காரம் செய்பவர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்பத்தில் ஈடுபடுவோர்கள் போன்ற பலருக்கு இது கை கொடுக்கும். இதன் வழியே வெகு நேரம் நின்று கொண்டே இருப்பதால் வரும் நோய்களையும் தடுக்கலாம். யார் கண்டால் எதிர்காலத்தில் அணிந்து கொள்ளக் கூடிய படுக்கைகள் (Wearable Bed) கூட கண்டுபிடிக்கப்படலாம்.


        


இன்று மனித குலம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. மனித குலத்தைச் சீரழிவில் சிக்க வைக்கும் அனைத்துச் சீர்கேடுகளும் இன்று மனிதர்களிடம் நீக்கமறக் காணப்படுகின்றன. நான்கு கால் மிருகங்களிடம் காணப்படாத ஒழுக்கக் கேடுகள் இன்று இந்த இரண்டு கால் மிருகங்களிடம் காணப்படுகின்றன. மிருகங்களில் எந்த மிருக இனமாவது ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அல்லது நீங்கள் கேள்விப்பட்டாவது இருக்கிறீர்களா? இருக்கவே முடியாது.

ஐயறிவு மிருகங்களை விட இழி நிலை!
ஐயறிவுள்ள மிருக இனங்களே செய்யத் துணியாத ஒரு மிகமிக ஈனச் செயலை ஆறு அறிவு மனிதன் செய்கிறான் என்றால், அதுவும் அரசுகளும், நீதி மன்றங்களும் அது தனி மனித உரிமை(?) என்று கூறி அதைச் சட்டமாக்குகிறார்கள் என்றால், மனித இனம் மிருக இனத்தைவிட மிகவும் கேடுகெட்ட இனமாக ஆகி விட்டது என்பதில் சந்தேகமுண்டா?

ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும், நீதியை நிலைநாட்டக் கடமைப்பட்ட நீதிபதிகளும் எந்த அளவு ஒழுக்கக் கேடுகளிலும், ஊழல்களிலும், லஞ்ச லாவண்யங்களிலும் முங்கிக் குளிக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒழுக்கக்கேடான ஓரினப் புணர்ச்சியை சட்டமாக்கி நடைமுறைக்குக் கொண்டு வந்ததே போதிய ஆதாரமாக இருக்கிறது. மனித இனம் இதற்கு மேலும் சீரழிவதற்கு ஒன்றுமே இல்லை என்று துணிந்து கூறிவிட முடியும். ஆக மனித இனம் அழிவின் விளிம்பில் அதாவது நரக விளிம்பில் நிற்கிறது என்பதில் அணுவளவும் சந்தேகமே இல்லை. மனிதன் மிருகத்திலும் கேடுகெட்ட ஒரு நிலைக்கு கீழ் இறங்குவதற்குக் காரணம் என்ன?

பகுத்தறிவாளர்கள் கடமை!
சிந்தித்துச் சீர்திருந்த சீர்திருத்த உண்மையான பகுத்தறிவாளர்கள் கடமைப்பட்டிருக்கிறார்களா? இல்லையா? அல்லது அவர்களும் பகுத்தறிவாளர்கள் என்று பீற்றிக்கொண்டு பகுத்தறிவான ஆறாவது அறிவைப் பறிகொடுத்துவிட்டு, ஐயறிவு மிருக வாழ்விலும் கேடுகெட்ட ஒரு வாழ்க்கையை வாழத் துணிந்து விட்டார்களா?

மனுநீதி!
மனிதன் தனக்குத்தானே சட்டம் வகுத்து அதன் படி நடப்பதால்தான் இந்த இழிநிலையை அடைந்துள்ளான். திருடனும், கொலைகாரனும் அவன் செய்த குற்றச்செயல்களுக்குச் சட்டம் இயற்றித் தீர்ப்பளித்தால், பரீட்சை எழுதியவனே, தான் எழுதியதைத் தானே திருத்தி வெற்றி தோல்வியை முடிவு செய்தால் அவை எப்படி உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பானவையாக இருக்குமோ, அதை விட மிகமிக அதிகமாகவே உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பாகவே மனுநீதி இருக்கும் என்பதில் சந்தேகமுண்டா?

இந்துக்களிடமுள்ள மனுநீதி!
இதற்கு இன்று இந்து மக்களிடையே அமுலில் இருக்கும் மனுநீதியே போதிய சான்றாகும். இறைவன் கொடுத்த நேர்வழி மனுநீதியாக இந்து மதப் புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அதன் கெடுதியை-கோர முகத்தை இன்று திட்டமாக, தெளிவாக உணர முடிகிறது. மனிதர்களை மேல் சாதி, கீழ்சாதி, தீண்டக்கூடாத சாதி எனப் பிரித்துக் கொடுமைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மனுநீதி என்றால் அது மனிதன் அமைத்தச் சட்டம் என்பதே பொருளாகும். இந்து மனுநீதி என்ற மனிதச் சட்டம் கற்பனை செய்யப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதன் கெடுதியை செமி பகுத்தறிவாளர்களால் பகுத்தறிய முடிகிறது.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிறித்தவ மதப் புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டு, இறைத் தூதர் ஈசா(அலை)வுக்கு அருளப்பட்ட இறை நீதியான இன்ஜீலில் நுழைக்கப்பட்ட மனுநீதி (பைபிள்)யின் கெடுதியை-கோரமுகத்தை பகுத்தறிவாளர்கள் உணர்கிறார்கள். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் மதப்புரோகிதர்கள் “பிக்ஹு’ என்ற பெயரால் கற்பனை செய்துள்ள மனு நீதியின் கெடுதியை-கோரமுகத்தை இன்று ஓரளவு பகுத்தறிவாளர்களால் உணர முடிகிறது.

சமீப கால மனுநீதிகள்!
அதற்கு மாறாக சுமார் 400 ஆண்டுகளுக்குள் மனிதக் கற்பனையில் உருவான மனுநீதிகளை இவர்களால் பகுத்தறிய முடியவில்லை. டார்வின் கற்பனையில் உதித்த மனுநீதி, காரல் மார்க்ஸ் கற்பனையில் உதித்த மனுநீதி, ஈ.வே.ரா. கற்பனையில் உதித்த மனுநீதி, அம்பேத்கர் கற்பனையில் உதித்த மனு நீதி, இப்படி இன்றைய மக்களால் பேரறிஞர்கள், சீர்திருத்தச் செம்மல்கள் என ஏற்றிப் போற்றிப் புகழப்படும் எண்ணற்றவர்களின் கற்பனையில் உருவான மனு நீதிகள், சனநாயகத்தின் பெயரால் மனிதன் கற்பனை செய்த மனுநீதி, கம்யூனிசத்தின் பெயரால் மனிதன் கற்பனை செய்த மனுநீதி, இப்படி வகை வகையான பெயர்களால் மனிதர்கள் கற்பனை செய்த மனு நீதிகள் இப்படி எண்ணற்ற மனுநீதிகளை மனிதகுலம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆரம்ப கால மனுநீதி!

இந்துக்களிடம் நடைமுறையிலிருக்கும் மனுநீதி கற்பனை செய்யப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதால், அதன் பரிணாம வளர்ச்சி கொண்டு அதன் மெகா கெடுதிகளை மனிதன் உணர்வது போல், கிறித்தவ, முஸ்லிம் மனுநீதிகளின் கெடுதியை உணர்வது போல் மிகச் சமீபத்தில் மனித இனம் கற்பனை செய்த மேலே நாம் விவரித்துள்ள மனுநீதிகளின் கெடுதிகளை இப்போதைக்கு முழுமையாக உணர வழியில்லை. இறைவனை மறுக்கும் நாத்திகர்கள் நாடெல்லாம் நினைவு கூறுகிறோம், மரியாதை செய்கிறோம் என்ற பெயரால் நிறுவி வரும் கற்சிலைகள் உலகம் அழியாமல் இன்னும் ஓரிரு ஆயிரம் ஆண்டுகள் இருந்தால் இச்சிலைகள் அனைத்தும் தெய்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும். இன்று தெய்வங்களாக வணங்கப்படும் கற்சிலைகள் அனைத்தும் நினைவு கூறவும், மரியாதை செலுத்தும் நோக்கத்துடனும் செதுக்கப்பட்டவை தான்.

மதகுருமார்களின் மனுநீதி!
முஸ்லிம் மதகுருமார்கள் உட்பட அனைத்து மதகுருமார்களும் கடவுளின் பெயரைச் சொல்லி நடைமுறைப்படுத்தும் அனைத்தும் அந்தந்த மதகுருமார்களின் முன்னோர்கள் மூதாதையர்களின் கற்பனைகளில் உருவான அனைத்தும் மனுநீதிச் சட்டங்களே அல்லாமல் இறைவன் அளித்த இறைநீதிச் சட்டங்கள் அல்ல.

முஸ்லிம் நாடுகளிலும் மனுநீதி!
இன்று முஸ்லிம் நாடுகள் அனைத்திலும் நடை முறையில் கடைபிடிக்கப்படுபவை இறைவன் அளித்த இறைநீதிச் சட்டங்கள் அல்ல. அவர்களின் மூதாதையர்களின், அல்லது இன்றைய தலைவர்களின், ஆட்சியாளர்களின் கற்பனையில் உருவான மனுநீதிச் சட்டங்களே. இந்த மனுநீதிச் சட்டங்களைக் கொண்டு மனித குலம் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. எனவேதான் அனைத்து நாடுகளிலும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ஆர்ப்பாட்டம், போராட்டம், வன்முறை, தீவிரவாதம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குடி, விபச்சாரம், சூதாட்டம் என அனைத்து வகைத் தீமைகளும், நாட்டு வெறி, பிரதேச வெறி, இன வெறி, மொழி வெறி, மாநில வெறி, சாதி வெறி, மதவெறி என அனைத்து வகை வெறிகளும் நிறைந்து காணப்படுகின்றன. மனித குலம் அமைதி இழந்து, நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அவலநிலை.

இறைநீதி இறுதியாகக் கொடுக்கப்பட்ட குர்ஆன் மட்டுமே!
இறைவனால் இறுதியாக இறைநீதியாகக் கொடுக்கப்பட்ட அல்குர்ஆன் மட்டுமே உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டிருப்பதுடன், இறைவனாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது (15:9). எனவே மனித குல நலனில் சுயநலத்தைத் துறந்து உண்மையிலேயே அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள், மனு நீதிகள் அனைத்தையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டி இறைநீதி குர்ஆன் சட்டங்களை நடை முறைப்படுத்த முன்வந்தால் மட்டுமே மனிதகுலத்தின் அமைதி நிறைந்த வளமான வாழ்க்கைக்கு வழி ஏற்படும். அறிவுஜீவிகளே, அறிஞர் பெருமக்களே முறையாக நடுநிலையோடு சிந்தியுங்கள்.

பகுத்தறிவாளர்களே பகுத்தறிவை இழந்து நரகம் புகாதீர்கள்!
இந்தச் சந்தர்ப்பத்தில், “”சாதி அரக்கனை ஒழிக்காமல் அரசியல் சீர்திருத்தத்தையோ, பொருளாதார சீர்திருத்தத்தையோ ஒருபோதும் அடைய முடியவே முடியாது” என்று பொருளாதார மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சொன்னதையும், “”இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என்று பெரியார் ஈ.வே.ரா.சொன்னதையும் மனித குலம் நலம் நாடும் நல்லுள்ளங்கள் அவசியம் பரிசீலிக்க வேண்டுகிறோம்.

மனிதர்களின், சுயநல அரசியல்வாதிகளின், சுய நல மதகுருமார்களின் கற்பனைகளில் உருவான மனுநீதிகள் அனைத்தையும் தீவைத்துக் கொளுத்தி விட்டு, மனிதனைப் படைத்தாளும் இறைவன் கொடுத்த இறைநீதி நிறைந்த அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து எவ்வித சுய விளக்கமும் இல்லாமல் அதன் வழிகாட்டலில் மனித இனம் வாழ முற்படாதவரை அதற்கு இவ்வுலகிலும் வெற்றி இல்லை; மறு உலகிலும் வெற்றி இல்லை. பகுத்தறிவாளர்களே ஆறாம் அறிவான பகுத்தறிவை இழந்து மோசம் போகாதீர்கள்; நிரந்தர நரகை அடையாதீர்கள்! எச்சரிக்கை!!



நாம் இன்று காணக்கூடிய தொலைத் தொடர்பு சாதனங்கள் அல்லாஹ்வினால் எமக்களிக்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடைகளாக இருக்கின்றன என்பதை நாமறிவோம். அத்தகைய சாதனங்களை நாம் அல்லாஹ்வுக்கு வழிப்படும் அம்சங்களிலும், அவனுடைய மார்க்கத்திற்குப் பணி புரியக்கூடிய வழிகளிலும், பெற்றோர் உறவினர் மத்தியிலான தொடர்பினை வலுப்படுத்தக்கூடிய விடயங்களிலும் பயன்படுத்துகின்ற போது, நாமும் அவற்றை சரிவரப் பயன்படுத்தியோர் கூட்டத்தில் ஆகிவிட முடியும்.

நபியவர்களின் காலத்திலோ, ஸஹாபாக்கள் மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தோர் காலத்திலோ இத்தகைய சாதனங்கள் காணப்படவில்லை என்பதைக் காரணங்காட்டி எவரும் அவற்றை தான் விரும்பியமாதிரி உபயோகித்துவிட முடியாது.

இஸ்லாம் எக்காலத்திற்கும் உகந்த மார்க்கமாக உள்ளது. மனிதன் வாழ்கின்ற சூழலில் அவன் எதிர்நோக்கின்ற அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தேவையான சட்டதிட்டங்களை அதில் காணலாம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இதனை எப்போதும் நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுவாக இஸ்லாம், எல்லா சட்டதிட்டங்களுக்கும் அடிப்படையாக காரணங்களை வகுத்துள்ளது. அத்தகைய காரணங்கள் எவ்விடயத்தை கையாளும் போதும் கவனிக்கப்பட வேண்டும். அவை நபியவர்கள் காலத்தில் இல்லாத கழியுகத்தில் காணப்படக்கூடிய எச்சாதனத்துடனாவது சம்பந்தப்பட்டிருந்தால், குறித்த அச்சாதனத்தின் உபயோகத்தின் போது அவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இன்று கையடக்கத் தொலைபேசி எனும் சாதனம் சமுகத்தில் பலராலும் உபயோகிக்கப்பட்டு வருகின்றது. எத்தனை பேர் அவற்றை உபயோகித்தாலும் அவை உரிய முறையில் உபயோகிக்கப்படுகின்றனவா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. நிச்சயமாக இல்லை, கையடக்கத்தொலைபேசிகளில் உண்டான பல மோசமான விளைவுகள் இதற்குச் சாட்சியாக உள்ளன. இறை நிராகரிப்பாளர்களை ஒரு புறம் விடுங்கள், நாங்கள் மறுமைக்காக வாழ்கின்றவர்கள். நம்முடைய வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வது எமது கடமை. இதனை கருத்தில் கொண்டு நான் கூற இருக்கின்ற சில ஆலோசளைகளை சற்று கூர்ந்து கவனியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!

கையடக்கத்தொலைபேசிகளை உபயோகிப்பவர்களுக்குத் தேவையான உபதேசங்கள் தொடர்பாக பல அறிஞர்கள் தங்கள் நூட்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தகைய நூட்களில் அறபு மொழியைக் கற்றறிந்தவர்களுக்கு வாசிக்கத்தக்க சிறந்த நூலாக, பேராசிரியர் பக்ர் அபூ ஸைத் அவர்களினால் எழுதப்பட்ட அதபுல் ஹாதிப் என்ற நூலை சிபாரிசு செய்கிறேன்.

கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்களுக்கான சில உபதேசங்கள்

கையடக்கத்தொலைபேசிகளில் நாம் மேற்கொள்ளக்கூடிய காரியங்களில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக நாம் அது விடயத்தில் அல்லாஹ்விடத்தில் பொறுப்புதாரிகளாக உள்ளோம். நாம் எமது பொறுப்புக்களைப்பற்றி விசாரிக்கப்படவுள்ளோம் என்பதை என்றும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். 

நாம் பேசக்கூடிய எவ்வகையான வார்த்தையாக இருந்தாலும் அவ்வார்த்தைகளை எழுதுவதற்குத் தயாராக உள்ள வானவர்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றார்கள் என்பதனை மனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், நாம் உலகில் வாழும் காலங்களில் இத்தகைய சாதனங்களின் மூலம் ஒருவருடைய சொத்து, உயிர், மானம் போன்றவை பறிபோவதற்குக் காரணமாக இருப்போம் என்றால், நிச்சயமாக மறுமை நாளில் எமக்கு ஈடேற்றம் கிடைக்கும் என நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

அது மாத்திரமின்றி, இத்தகைய சாதனங்களைத் தவறான வழிகளில் உபயோகிப்பது, இஸ்லாத்தின் அறநெறிகளைப் பாழ்படுத்திய குற்றத்திக்கு உள்ளாக்கிவிடும் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கையடக்கத்தொலைபேசிகள் மூலம் யாருக்கும் இடையூறு மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடாது. யாருடனாவது தொடர்பினை ஏற்படுத்த நாடினால் முதலில் அவருடன் கதைப்பதற்கு உகந்த நேரத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டும். அதன் போது, குறித்த அந்நபரின் அன்றாடத்தேவைகளை நிறைவேற்றும் வேளை, மற்றும் வழமையாகப் புரியும் பணிகள் போன்றன கவனிக்கப்பட வேண்டும்.
மேலும், நீங்கள் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தி, அவர் அதற்கு பதிலளிக்காது போனால் அல்லது வழமைக்கு மாற்றமாக தனது பேச்சை சுருக்கிக் கொண்டால், உடனே அவர் மீது தப்பெண்ணம் கொண்டுவிடாது அவர் அவ்வாறு நடந்து கொண்டமைக்கான நியாயமான காரணங்களைத்தேட வேண்டும்.

இன்னும், யாருடன் பேசுவதாக இருந்தாலும் ஒழுக்கமாக வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பிறர் மனம் நோகும் விதத்தில் நடந்து கோள்ளக்கூடாது.

யாருடனாவது பேச முற்படும் போது அது அவருடைய தொலைபேசி இலக்கம்தானா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இவ்வாறான வழிமுறை பேணப்படாததின் காரணமாக தகாத உறவுகள் உண்டாகி குடும்பங்களுக்கு மத்தியில் பல விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

நீங்கள் யாருடனாவது கதைக்க முற்படும் போது அல்லது அழைப்புக்கு பதிலளிக்க முற்படும் போது அவர் முஸ்லிமாக இருந்தால் ஸலாத்தைக் கொண்டு எம் பேச்சிக்களை ஆரம்பிக்க வேண்டும்.
உங்களுடன் அழைப்பினை ஏற்படுத்தியர் சலிப்படையும் அளவுக்கு பேச்சை நீட்டக்கூடாது. ஏனெனில், இவ்வாறு நடந்து கொள்வது ஒருவிதத்தில் உங்களுடன் அழைப்பில் இருப்பவருக்கு இடையூறாகவும் இன்னொரு விதத்தில் உங்களுக்கு அது வீண்விரயமாகவும் அமையும். அப்படி அவசியமான ஒரு விடயத்தை நேரம் எடுத்து கதைக்கவேண்டி ஏற்பட்டால் அழைப்பில் இருப்பவரிடம் அனுமதி எடுத்த பின்பே பேச்சைத் தொடர வேண்டும்.

ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும் போது நீங்கள் யாருடன் கதைக்கின்றீர்களோ அவரின் அனுமதியின்றி அவரது பேச்சை பதிவு செய்யவோ அல்லது அதனை பிறர் முன்னிலையில் சத்தமாகக் கேட்க வைப்பதோ தவிர்க்கப்பட வேண்டும்.
பேராசிரியர் பக்ர் அபூ ஸைத் அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஒருவரின் பேச்சை அவரது அனுமதியின்றி பதிவு செய்வது அமானித மோசடியாகும். இத்தகைய செயல்களில் ஒரு முஸ்லிம் ஈடுபடுவது அவனுக்கு உகந்ததல்ல. அவ்வாறு தொலைபேசியில் பேசப்படும் விடயம் மார்க்கத்துடன் தொடர்புடைய அம்சமாகவோ அல்லது உலகத்துடன் தொடர்புடைய அம்சமாகவோ இருக்கலாம்.’ (அதபுல் ஹாதிப் : 28)
மற்றோர் இடத்தில்; கூறும் போது, ‘ஒருவரின் அனுமதியின்றி அவரின் பேச்சைப் பதிவு செய்வது ஏமாற்றும் நம்பிக்கைத் துரோகமுமாகும். மேலும், அவ்வாறு பதிவு செய்யப்பட்ட பேச்சை பிறருக்கு அனுப்புவது மென்மேலும் மோசடியை அதிகரிக்கச் செய்யும். அத்தோடு அதனில் கூட்டுதல் குறைத்தல் செய்து பதிவு செய்யப்பட்ட பேச்சின் ஒழுங்கில் மாற்றம் செய்வது மிகப் பாரதூரமான குற்றமாகும்.’ (அதபுல் ஹாதிப்: 29,30)
பிறருடைய தொலைபேசியை அவரது அனுமதியின்றி எடுப்பதையும், அதனுள் உட்சென்று அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைப் பார்வையிடுவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

நவீன கையடக்கத்தொலைபேசிகளில் காணப்படுகின்ற விஷேட அம்சங்களான கேமரா, வீடியோ, புலூதூத், ரெகோடர் போன்றவற்றை இஸ்லாம் அனுமதிக்காத விடயங்களில் பாவிக்காதிருத்தல். இத்தகைய சாதனங்கள் சரிவரப் பயன்படுத்தப்படாததின் காரணத்தினால் இன்று வீடுகள், பாடசாலைகள், கடைத்தெருக்கள், பொது இடங்கள் அனைத்தும் சீர்கெட்டு இருக்கின்றன.

பள்ளிவாசலினுள் பிரவேசிக்கும் போது கையடக்கத்தொலைபேசிகளை செயலிழக்கச் செய்து விட்டு அல்லது சைலன்டில் போட்டுவிட்டுச் செல்ல வேண்டும். மாற்றமாக அதுவிடயத்தில் கரிசனைகாட்டாமல் தொழுகையில் நுழைந்ததின் பிற்பாடு தொலைபேசி அழைப்புக்கள் வரும் போது தக்வாவைப்பற்றி சிந்திப்பதில் அர்த்தமில்லை. மேலும், இத்தகைய செயல்கள் தொழுகையாளிகளின் சிந்தனைகளைத் திசைதிருப்பக்கூடியனவாகவும் இருக்கின்றன.
ஒருவருடன் அழைப்பினை ஏற்படுத்தும் போது அழைப்பில் இருப்பவர் உங்களை யார் என்று இனங்காணத்தவறும் பட்சத்தில் அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தாது தன்னைப்பற்றிய விபரத்தை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

ஒரு முறை ஜாபிர் (ரழி) அவர்கள் நபியவர்களின் வீடு நோக்கி வந்து அவரை அழைத்த போது, நபியவர்கள் வீட்டிற்குள் இருந்து கொண்டு யார்? என வினவினார்கள். அதற்கு ஜாபிர் (ரழி) அவர்கள், நான் என் பதிலளித்தார்கள். அப்போது நபியவர்கள் எனது பதிலை வெறுத்தவர்களாக ‘நான், நான்’ என்று கூறிக் கொண்டு என்னை நோக்கி வந்தார்கள். (புகாரி, முஸ்லிம்)
முடியுமான அளவு இசையுடன் தொடர்புடைய சமிக்ஞைகளை ரிங்டொன்னின் (Ringtone) போது உபயோகிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆலோசனை சபைகள், மார்க்க உபன்யாசம் நடைபெறும் இடங்கள் போன்ற முக்கிய கூட்டங்களின் போது கையடக்கத் தொலைபேசியை உபயோகிக்காதிருத்தல்.

கண்ட கண்ட இடங்களில் தொலைபேசியை வைக்காதிருத்தல்.
தொலைபேசிகளின் மூலம் குறுந்தகவல்களைப் பரிமாறும் போது ஒழுக்கமான நடைமுறைகளைக் கையாளல்.
குறுந்தகவல்களின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களை உறுதி செய்து கொள்ளல்.

உங்களுக்கு பிறரிடம் இருந்து கிடைக்கக்கூடிய மோசமான குறுந்தவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் உடனடியாக அழித்துவிட வேண்டும். மேலும், அப்படியான தகவல்களை உங்களுக்குத் தந்தவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும் வேண்டும்.
தொலைபேசியில் நேரத்தை வீணடிக்காதிருத்தல். அவற்றில் பதிவு செய்யப்பட்ட விடயங்களைப் பார்வையிடுவதினாலும் அதில் காணப்படக்கூடிய விளையாட்டுக்களை விளையாடுவதினாலும் பிரயோசனமின்றி நேரம் கழிகின்றது. இது ஒரு முஸ்லிமுக்கு உகந்ததல்ல.

தாவுத் அத்தாயி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘உன்னுடைய இரட்சகனின் சிந்தனையை விட்டும் உன்னைத் திசைதிருப்பக்கூடிய அனைத்தும் கெட்ட விளைவை ஏற்படுத்தக் கூடியன’ என்கிறார்.

நாம் உபயோகிக்கக்கூடிய தொலைபேசிகளைக் கொண்டு பெருமை பாராட்டாதிருத்தல். மேலும், பிறரது தொலைபேசிகளைக் கொண்டு மக்கள் முன்னிலையில் தன்னை அடையாளப்படுத்தாதிருத்தல்.
இசை, பாடல், திரைப்படம், புகைப்படங்கள் போன்றவற்றை கையடக்கத்தொலைபேசிகளில் பதிவு செய்வதும், அவற்றை நண்பர்களுக்கு மத்தியில் பரிமாறுவதும் இஸ்லாம் தடை செய்யும் அம்சங்களாகும்.

ஒவ்வொரு பொறுப்புதாரரும் தனக்குக் கீழால் உள்ளவர்கள் எப்படியான வழிகளில் தம் கையடக்கத்தொலைபேசிகளை உபயோகிக்கிறார்கள் என்பதை கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். தன் பொறுப்பில் இருப்பவர்களில் எவர்களுக்கு கையடக்கத்தெலைபேசிகளை உபயோகிப்பதற்கு தகுதியிருக்கின்றது என்பதையும் தெரிந்திருக்க வேண்டும்.

இப்படி கையடக்கத்தொலைபேசியின் உபயோகத்துடன் தொடர்புடைய பல ஒழுக்க விழுமியங்கள் உள்ளன. அவற்றை கண்டறிந்து நாம் உபயோகிக்கின்ற கையடக்கத் தொலைபேசிகளை அல்லாஹ் விரும்பக்கூடிய வழிகளில் பயன்படுத்தி, அவற்றில் அமானித்தைப் பேணக்கூடியர்களாக நானும் நீங்களும் மாறுவோமாக!



உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இன்று இந்திய விமானப்படை விமானம் தரையிறங்கியபோது திடீரென டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விமானப்படைக்கு சொந்தமான 45 இருக்கைகள் கொண்ட அவ்ரோ விமானத்தில் மூத்த அதிகாரிகள் உள்பட 10 பேர் டேராடூன் வந்தனர். ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ரன்வேயின் பாதியிலேயே விமானத்தின் டயர் வெடித்தது.

இதனால் விமானம் பெரும் சத்தத்துடன் தரையில் உரசியபடி சென்றது. ஆனால், ரன்வேயை விட்டு விலகாமல், சரியான இடத்தில் விமானத்தை விமானி சாமர்த்தியமாக தரையிறக்கியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. அதில் பயணம் செய்த 10 பேரும் பத்திரமாக இறங்கினர்.

அதேசமயம், விமானத்தை உடனடியாக அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த முடியாததால் மற்ற விமானங்கள் அந்த ரன்வேயில் தரையிறங்கவோ, அங்கிருந்து புறப்பட்டு செல்லவோ முடியவில்லை. இதனால் சில விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து ஆக்ரா விமானப்படை தளத்தில் இருந்து தொழில்நுட்ப குழுவினர் தனி ஹெலிகாப்டரில் வந்தனர். அவர்கள் டயரை மாற்றியபிறகு அந்த ரன்வேயில் விமான சேவை தொடங்கும் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.



கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம்.

1=ஆயில் புல்லிங்
~~~~~~~~~~~~~~~~~
ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்,

2=கிராம்பு
~~~~~~~~~~~~~
2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்,

3=உப்பு தண்ணீர்
~~~~~~~~~~~~~~~~~~~
அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்,

4=பூண்டு
~~~~~~~~~~~
3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்,

5=மஞ்சள்
~~~~~~~~~~~~~
மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்,

6=வேப்பிலை
~~~~~~~~~~~~~~
வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் ,

7=உணவுமுறைகளில் மாற்றம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.

8=சர்க்கரையைத் தவிர்க்கவும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுத்திரிக்கரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதனால் பற்களில் சொத்தையும் அதிகரிக்கும். உணவுகளில் இனிப்பு வேண்டுமானால், தேனைக் கலந்து கொள்ளலாம்.

நீங்கள் தெரிந்துகொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்…. பகிருங்கள்……





-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்-

ஒரு குடும்பம் சிறந்த முறையில் முன்னேறுவதற்கு கணவனுடைய பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைகிறது. அதே நேரம் கணவன் இறந்து விட்டால், அந்த குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாக மாறிவிடுகிறது?

ஒரு கணவன் இறந்த பிறகு அந்த குடும்பத்திற்கு இரண்டு பெயர்கள் வந்து விடும் ஒன்று மனைவியை விதவை என்றும், பிள்ளைகளை அநாதைகள், என்றும் அழைப்பார்கள். இது விரும்பியோ, விரும்பாமலோ,உலகில் நடந்து வருகின்றது.

கணவன் இருக்கும் வரையில் உறுதியாக இருந்தவள் கணவனை இழந்த பின் தானாக மனபாதிப்புக்கு ஆழாகி விடுகிறாள். அப்போது கணவனின் நுாறு வீதமான பங்களிப்பின் உண்மையை உணர்கிறாள். என் பிள்ளைகளை நான் எப்படி வளர்க்கப் போகிறேன், எனக்கு பாதுகாப்பு யார் ? போன்ற சிந்தனைகளால் மனஉளைச்சல்களுக்கு ஆளாகின்றாள்.

நாட்கள் செல்லச் செல்ல அந்த பிள்ளைகள் மட்டுமல்ல அந்த குடும்பமே அநாதையாகி விடும் அவல நிலையை காண்கிறோம். அந்த தாயின் சிரமத்தையும், பிள்ளைகளின் ஏக்கத்தையும் போக்கும் வண்ணமாக அந்த குடும்பத்திற்கு உதவிக் கரம் நீட்டுங்கள், அந்த அநாதைப் பிள்ளைகளுக்கு தாராளமாக வாரி வழங்குங்கள், உங்களது பிள்ளைகளைப் போல அன்பாக அணைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் அவர்களுக்கு செய்கின்ற உதவிகளுக்கு பகரமாக அல்லாஹ் இந்த உலகத்தில் உங்களை கண்ணியப் படுத்துவதோடு,மறுமையில் சுவனத்தை தருவதற்கு தயாராக உள்ளதாக இஸ்லாம் நமக்கு ஆர்வமூட்டுகிறது.

நபி (ஸல்) அவர்கள் அநாதையாக வளர்ந்து வரும் போது,அவர்களை வளர்த்தவர்களுக்கு அல்லாஹ் செய்த அருள் வளங்களை முதலில் பார்த்து விட்டு, பொதுவாக அநாதைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி தெடர்ந்து பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னரே தந்தை அப்துல்லாஹ் மரணித்து விட்டார்கள். நபியவர்கள் பிறந்து சிறிது காலத்தில் தாய் ஆமினாவும் மரணித்து விட்டார்கள்.

அன்றைய காலத்தில் பிற குழந்தைகளுக்கு வாடகைக்காக பால் ஊட்டுவது வழக்கம். அந்த அடிப்படையில் நபியவர்களுக்கு அபூ லஹபின் அடிமையான ”ஸூவைபிய்யா என்ற தாயிடம் நபியவர்கள் பால் குடித்தார்கள். மேலும் ஹலீமா அவர்களிடமும் பால் குடித்தார்கள். ஹலீமா அவர்கள் ஆரம்பத்தில் நபியவர்களை பால் ஊட்ட எடுப்பதற்கு பின் வங்கினார்கள். ஏன் என்றால் தந்தை இருந்தால் தான் அதற்கான ஊழியம் கிடைக்கும். ஆனால் நபியவர்களுக்கோ தந்தை இல்லை எனவே பால் கொடுத்தால் ஊழியம் யாரிடம் பெறுவது என்ற பிரச்சினையால் ஆரம்பத்தில் நபியவர்களுக்கு பால் கொடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை. என்றாலும் வேறு குழந்தைகள் கிடைக்காததினால் இறுதியில் நபியவர்களையே ஹலீமா அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நபியவர்களின் சிறப்பால் ஹலீமா அவர்களது ஒட்டகம் தாராளமாக பால் கொடுக்க ஆரம்பித்தது. அவர்கள் பயணம் செய்யும் கழுதை வேகமாக பயணிக்க ஆரம்பித்தது. ஹலீமா அவர்களது மார்பில் தாராளமாக பால் சுரக்க ஆரம்பித்தது. அவர்களது குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருள் வளம் வர ஆரம்பித்து. ஹலீமாவே! நீ அதிகமான பரகத்துள்ள குழந்தையை பெற்றுள்ளாய் என்று ஹலீமாவின் கணவர் கூறினார்.

இது அநாதைக் குழந்தையின் மூலம் அக்குடும்பத்திற்கு அல்லாஹ்வால் கொடுக்கப் படு்ம் எதிர் பாராத அருள் வளமாகும்.

அநாதைகளை பராமறிப்பதன் சிறப்புகள்
”அல்லாஹ்வின் மீது அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், கைதிகளுக்கும் அவர்கள் உணவளிப்பார்கள். மேலும் நாம் உங்களுக்கு உணவளிப்பது எல்லாம் அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தவிர, உங்களிடமிருந்து எந்த பிரதி பலனையோ, அல்லது நன்றியையோ,எதிர்ப் பார்த்து அல்ல (76- 08)

எதை செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்விற்காக மட்டும் தான் செய்ய வேண்டும். பிறர் என்னை பாராட்ட வேண்டும், புகழ வேணடும், என்னை பெருமையாக நினைக்க வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் வந்து விடக்கூடாது.

மேலும் ” நீங்கள் அநாதைகளை கண்ணியப் படுத்துவதும் கிடையாது” (89- 17)

அநாதைகளை நாம் கண்ணியப் படுத்த வேண்டும் என்பதை மேற்ச் சென்ற வசனம் நமக்கு ஆர்வமூட்டுகிறது. எனவே அநாதைகள் விடயத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் ” நபியே ! நீர் கவனித்தீரா ? நியாயத் தீர்ப்பு நாளை பொய்ப்பிப்பவன் தான் அநாதைகளை விரட்டுவான். (107 -01 )

அநாதைகளை புறக்கணிக்கக் கூடாது, அப்படி புறக்கணிப்பவன் தான் பொய்யன் என்பதை மேற்ச் சென்ற குர்ஆன் வசனம் எச்சரிக்கிறது்

மேலும் …”அநாதைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள், அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது நலவாகும். என்று நபியே ! கூறிவிடுங்கள் மேலும் அவர்களுடன் நீங்கள் கலந்து இருந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்களாவர்…(2- 220)

இந்த வசனம் இரண்டு முக்கியமான விசயங்களை எடுத்துக் காட்டுகிறது. முதலாவது அநாதைகளுடன் எந்த பாகுபாடின்றி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். என்பதாகவும், இரண்டாவது அவர்கள் யாரும் அற்ற அநாதைகள் என்று ஒதுக்கி விடாமல் நமது சகோதரர்களைப் போல இரண்டரக் கலந்து இருக்க வேண்டும், என்பதையும் மேற்ச் சென்ற குர்ஆன் வசனம் நமக்கு நினைவு படுத்துகிறது.

அநாதைகளுக்கு அநியாயம் செய்யாதீர்கள்
எவர் அநாதைகளுக்கு ஆதரவு கொடுக்காமல், அநியாயம் செய்கிறாரோ அவர் இந்த உலகில் இழிவு படுத்தப்படுவதோடு, மறுமை நாளில் கடுமையான முறையில் வேதனைப் படுத்தப்படுவார்.

” எவர் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக சாப்பிடுகிறாரோ அவர் வயிறுகளில் நெருப்பைத்தான் சாப்பிடுகிறார். மேலும் அவர் நரகத்தில் நுழைவிக்கப் படுவார். (4- 10)

மேலும் ” நீங்கள் அநாதைகளின் சொத்துக்களை ( பருவ வயதை அடைந்த பின் குறைவின்றி ) கொடுத்து விடுங்கள், ( அதிலுள்ள ) நல்லவற்றிக்கு பகரமாக கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்களுடைய பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். ( 04 -02 )

அநாதை பிள்ளைகளை வளர்த்து வரும் போது அவர்களுக்கு சொத்துகள் இருந்தால், அவர்கள் விபரமான பருவத்தை அடைந்த பின் அந்த சொத்துக்களை சரியாக கொடுத்து விட வேண்டும். தட்டிக் கேட்க யாருமில்லை என்பதற்காக அவர்களுடைய பொருட்களை அநியாயமாக எடுத்து விடக் கூடாது.

மேலும் அநாதைகளை பராமறிப்போர் ஏழைகளாக இருந்தால் நியாயமான முறையில் தேவையான அளவு எடுத்துக் கொள்ள அல்லாஹ் அனுமதிக்கிறான். அதை பின் வரும் வசனம் தெளிவுப் படுத்துகின்றன.

… ”அநாதையை பராமறிப்பவர் செல்வந்தராக இருந்தால் ( அநாதையின் சொத்துகளை சாப்பிடும் விடயத்தில் ) தவிர்த்துக் கொள்ளுங்கள், ஏழைகளாக இருந்தால் நியாயமான அளவு புசிக்கலாம். அநாதைகளின் பொருட்கள் அவர்களிடம் ஒப்படைக்கும் போது அதற்கான சாட்சிகளை ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள்.கணக்கெடுப்பதில் அல்லாஹ் போதுமானவன். ( 04 – 06 )

மேலும் ”அநாதைகளின் சொத்துக்களை அழகிய முறையிலே தவிர நீங்கள் நெருங்காதீர்கள். ( 17 – 34 )

மேலும் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக சாப்பிடுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும் என்று நபியவர்கள் கூறினார்கள். (புகாரி)

இப்படி பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும், கடுமையாக எச்சரித்துக் கொண்டிருக்கின்றன.

அநாதை இல்லங்கள்
அநாதைகளை ஓரிடத்தில் வைத்து பராமறிப்பதற்காக உலக மட்டத்தில் காப்பகங்கள் நிறுவப்பட்டு பிள்ளைகளை பாதுகாத்து வருகிறார்கள். இந்த அநாதை பிள்ளைகளுக்காக உலக மட்டத்தில் தாராள மனம் படைத்த செல்வந்தர்கள் தனது செல்வங்களை வாரி வழங்குகிறார்கள். வரவேற்கக் கூடிய விடயம் தான். அவர்கள் நல்ல நோக்கத்திற்காக அள்ளி கொடுக்கிறார்கள். இருந்தாலும் ஓரிரு இடங்களில் அநாதைகளின் சொத்துக்கள் சூரையாடப் படுகிறன்றன. அநாதைகளின் அவல நிலைகளை படம் எடுத்துக் காட்டி பல இலட்சங்கள் மோசடி செய்யப் படுகின்றன. இவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

பதவியையும், அதிகாரத்தையும் பயன் படுத்தி யாரையும் இந்த உலகில் ஏமாற்றலாம். ஆனால் படைத்த ரப்பை யாரும் ஏமாற்ற முடியாது. மறுமை நாளில் சம்பந்தப் பட்டவர்கள் ஏமாந்து போவார்கள்.

எனவே உங்கள் தொழில்களில் அபிவிருத்தியை காண வேண்டுமா ? உங்கள் குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருள் வளம் தேவையா ? அதற்கான சிறந்த ஒரே வழி அநாதைகளுக்கு தாராளமாக அள்ளிக் கொடுப்பதாகும்.




அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்த ஒருவருக்கு, மாரடைப்பு ஏற்பட்டபோது. சக பயணிகளில் இரு முஸ்லிம் பெண்கள், அவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளனர்.

எந்த ஒரு தனி மனித குற்றத்தின் போதும், "முஸ்லிம்" என்ற ஒரு வார்த்தையை வேண்டுமென்றே குற்றவாளியின் பெயரோடு திணிக்கும் ஊடகங்கள், முஸ்லிம்கள் நல்லது செய்யும்போது மட்டும் தன்னார்வத் தொண்டர்களாக மாற்றிவிடுவார்கள் அல்லது முற்றிலும் அந்த செய்தியைப் புறக்கணித்து, தாங்கள் அற நெறி வழுவாத நன் மக்கள் என்று பறைசாற்றுகின்றனர். (!!!)

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget